பெங்களூரில் எச்.எம்.பி.வி(HMPV) பாதித்த முதல் 8 மாத குழந்தை!!

Photo of author

By Gayathri

பெங்களூரில் எச்.எம்.பி.வி(HMPV) பாதித்த முதல் 8 மாத குழந்தை!!

Gayathri

First 8-month-old baby infected with HMPV in Bangalore!!

HMPV வைரஸ் என்பது (human metapneumovirus) என்பதை சுருக்கம் ஆகும்.. அதாவது மனித மெட்டாப்நிமோவைரஸ். இதுவும் கொரோனா போலவே.. மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும். அதாவது இதுவும் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் வைரஸ் ஆகும். சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது.சீனாவில் இளைஞர்கள் இடையே முக்கியமாக சிறுவயதை சேர்ந்தவர்கள் இடையே இது அதிகம் ஏற்படுகிறது. கொரோனா எப்படி பூமர் வைரஸ் என்று அழைக்கப்பட்டது. அப்படி இது ஜென் ஆல்பா வைரஸ் என்று அழைக்கும் வகையில்.. வயது குறைவானவர்களை இந்த வைரஸ் அதிகம் பாதித்து வருகிறது.

சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த கேஸ் பதிவாகி உள்ளது. பெங்களூரில் முதல் எச்.எம்.பி.வி கேஸ் பதிவாகி உள்ளது. 8 மாத குழந்தை ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல் 3 மாதம் கொண்ட இன்னொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.பெங்களூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில்தான் இரண்டு கேஸ்களும் பதிவாகி உள்ளன.

மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது.. நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் போஸ்டுகள் வர தொடங்கி உள்ளன. எச்.எம்.பி.வி வைரஸ் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிகள் தீவிரமாக பரவி வருகின்றன.முக்கியமாக இளம் வயது.. அதாவது 14 வயதுக்கு குறைவான வயது கொண்டவர்களை அதிகமாக எச்.எம்.பி.வி வைரஸ் தாக்குகிறது. சீன அதிகாரிகளும், உலக சுகாதார மையமும் பயப்படும் அளவிற்கு இது பெரிய பிரச்சனை இல்லை.. இதை பார்த்து கொரோனா போல அச்சப்பட வேண்டாம். இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் எச்.எம்.பி.வி என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.