இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த முதல் வீரர்!!! ஜேசன் ராய் சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 182 ரன்கள் குவித்து ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்பொழுது 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 181 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 124 பந்துகளில் 182 ரன்கள் குவித்திருந்தார். அதில் 9 இமாலய சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்நிலையில் சதம் அடித்து 182 ரன்கள் குவித்த பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் சதம் அடித்து 180 ரன்கள் அடித்திருந்தார். இதுவரை ஜேசன் ராய் அடித்த 180 ரன்கள் தான் இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் ஒருவர் அதிகபட்சமாக அடித்த ரன்களாக இருந்தது.
தற்பொழுது ஜேசன் ராய் அவர்களை விட இரண்டு ரன்கள் அதிகமாக அடித்து இங்கிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் தட்டி சென்றுள்ளார். இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக பென்ஸ்டோக்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.