விக்ரம் படத்தின் முதல் காட்சி!! வில்லன் இவர் தானாம்!!

0
199
First scene of Vikram movie !! He is the villain !!
First scene of Vikram movie !! He is the villain !!

விக்ரம் படத்தின் முதல் காட்சி!! வில்லன் இவர் தானாம்!!

கமல்ஹாசன் நடித்து, ‘விக்ரம்’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்தது. அதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்து இருந்தார். இது 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் மறைந்த ராஜசேகர் ஆவார். இந்த படத்தை கமலஹாசன் தான் தயாரித்தார். மேலும், இந்த படத்தில் அம்பிகா, சத்தியராஜ், லிஸ்சி, சாருஹாசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.

பல வருட இடைவெளிக்குப்பின், ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகி கொண்டுள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று கமல்ஹாசனின் விக்ரம் ஆகும்.

மாஸ்டர் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெயியாக போகும் படம் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. இந்த படம் நடிகர் கமலின் 232 வது படம் ஆகும். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்தப்படத்தின் முதல் காட்சி படமாக்கப்பட்டது இதில் விக்ரம் சேதுபதி மற்றும் கமலஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Previous articleபுதிய தொழில்களுக்கு பல சலுகைகள்!! தமிழக அரசு அறிவிப்பு!!
Next articleஐந்து வருடம் கழித்து எங்கிருந்து வந்தார் முதல் மனைவி?? கேள்விக்குறியானது நடிகை பிரியாமணியின் வாழ்க்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here