முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!! 

0
122
First Test Match!! Indian players made a strong start!!
First Test Match!! Indian players made a strong start!!

முதலாவது டெஸ்ட் போட்டி!! வலுவான தொடக்கம் அமைத்த இந்திய வீரர்கள்!! 

வேஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சதம் அடித்து வலுவான தொடக்கம் அமைத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திணறினர்.

அதிலும் அஸ்வின் அவர்களை தனது சுழற்பந்து வீச்சால் மிரட்டினார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேஜ்நரின் சந்தர்பால் (12 ரன்), கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் (20 ரன்) ஆகியோரை தொடர்ச்சியாக  காலி செய்த அஸ்வின் கொடுத்த தொடர் நெருக்கடி போதாது என்று  இன்னொரு பக்கம் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவும் தாக்குதலை தொடுக்க வெஸ்ட் இண்டீஸ் முழுமையாக சரண் அடைந்தது. அறிமுக வீரர் ஆலிக் அதானேஷ் (47 ரன், 99 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) தவிர மற்றவர்களின் பேட்டிங் குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.

பின்னர் தேனீர் இடைவெளிக்கு பின்னர் அந்த அணி முதல் இன்னிங்க்ஸ்-இல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீசின் இரண்டாவது மோசமான ஸ்கோர் இதுவாகும். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்க்சை தொடங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் புதுமுக வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் தொடங்கினார்கள். நேர்த்தியான பேட்டிங் மூலம் இவர்கள் இருவரும் முதல் நாள் முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வாலும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இரண்டாவது இன்னிங்க்சுக்கு பின்னர் தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்த இந்திய ஜோடி என்ற சிறப்புடன் வலுவான அடித்தளம் அமைத்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா முதல்இன்னிங்சில் விக்கெட் இழக்காமல் முன்னிலை காண்பது இதுவே முதல் நிகழ்வாகும்.
எதிரணியின் ஸ்கோரையும் கடந்து முன்னிலை பெற்றனர்.

அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார். மும்பையை சேர்ந்த இவர் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அடுத்து மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிபடுத்திய ரோகித் சர்மா 10 பவுண்டரி, 2 சிக்சருடன் தனது சதத்தை பூர்த்தி செய்த நிலையில் 103 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து விராட் கோலி சேர்ந்த நிலையில் ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து நிதானமாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தினர். 113 ஓவர்கள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிகு 312 ரன்கள் சேர்த்து 162 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

ஜெய்ஸ்வால் 143 ரன்னுடனும் ( 350 பந்துகள், 14 பவுண்டரி), விராட் கோலி 36 ரன்னுடனும் ( 96 பந்து, 1 பவுண்டரி) ஆடிக்கொண்டிருந்தனர். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் ஜோமல் வேரிக்கன் மற்றும் அதான்ஸே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த நிலையில் இன்று இரவு மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Previous articleவீடியோ கால் மூலமாக திருமணம்… அதற்கு இது தான் காரணமா!!
Next articleஇனி சந்தைகளில் வர போகின்றது ரெட்மி 12!! பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆகஸ்ட் 1 முதல் விற்பனை!!