150 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்!

0
113

உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சார்ந்த ஷப்னம் சலீம் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு ஷப்னம் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 2008ஆம் வருடம் ஷப்னம் வீட்டில் இருக்கின்ற அவரது பெற்றோர் உள்பட 7 பேரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவத்திற்கு அவருடைய காதலர் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2010ஆம் வருடம் அலகாபாத் உயர் நீதிமன்றமும், 2015 ஆம் வருடம் உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்தனர். அவர்களுடைய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியானது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் பெண்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தனி அறை இருக்கின்றது. இந்த அறையானது கடந்த 150 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பெண் குற்றவாளி யாரும் இதுவரையில் தூக்கு விடப்படவில்லை. அந்த நிலையில், மதுராவில் ஷப்னம் அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. அதற்காக அந்த அறையின் கதவு திறக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தூக்கு தண்டனை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleதொடர்ந்து 4 வது நாளாக சரியும் தங்கத்தின் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்
Next articleபத்திரிகையாளர்களுக்கு அதிரடி பேட்டி கொடுத்த ஜெயகுமார்! அதிர்ச்சியில் புதுச்சேரி அரசு!