இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

0
124

ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், மும்பை பங்கு சந்தை சிறப்பான வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் டிரெயிட்டர்ஸ் தளம் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும் எஸ்பிஐ வங்கியின் அறிக்கையில் 18.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் என்றும், ரிசர்வ் வங்கி 21.4 சதவீதம் ஆக இருக்கும் என்றும் இந்திய ரதிங்ஸ் அண்ட் ரிசர்ச் 9.4 சதவீதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் &ரிசர்ச் கணித்து இருக்கிறது. இந்த நிலையில், நாட்டின் நிதி பற்றாக்குறை மற்றும் எட்டு முக்கிய துறையின் உற்பத்தியாளர்கள் தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது.

இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் இந்திய மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி 20.3 சதவீதம் என்ற வரலாற்று உயர்வை அடைந்திருக்கிறது. ஆனாலும் மத்திய அரசு இரண்டு முறை நாட்டின் வளர்ச்சிக்காக ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்து 2019 மற்றும் 20 ஆம் வருடத்தின் ஜூன் காலாண்டு அறிக்கை இதுவரை நடக்கவில்லை என்பதுதான் தற்சமயம் வருத்தமான தகவலாக இருக்கிறது.

மத்திய அரசு வெளியிட இருக்கின்றனர் தரவுகளின் அடிப்படையில் நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி பற்றாக்குறையின் ஒட்டுமொத்த அளவில் ஜூன் காலாண்டு முடிவில் 21.3 சதவீதத்தை அடைந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நாட்டின் நிதி பற்றாக்குறையில் அளவீடு 3.21 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. இது ஒட்டுமொத்த நிதியாண்டின் அளவில் 21.3 சதவீதம் ஆகும்.

அதேபோல ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வரி வருமானத்தில் சுமார் 5.77 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. அதேசமயம் ஒட்டு மொத்த செலவுகளில் அழகு 10.4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மத்திய அரசின் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவை 6.8 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில். நடப்பு நிதி ஆண்டின் முதல் நான்கு மாதத்தில் 21.34 சதவீதத்தை அடைந்திருக்கிறது.

நிதி பற்றாக்குறையை குறைப்பது அதற்காக மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை மற்றும் மற்ற பிரிவுகளில் இருந்து கிடைக்கும் வரி வருமானம் அதிகரித்து இருக்கின்ற காரணத்தால், இதனை கட்டுப்படுத்த இயலும் என்று சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் ஏர்-இந்தியா எல்ஐசி மற்றும் தேசிய பணமாக்கல் திட்டம் மூலமாக திரட்டப்படும் நிதியின் மூலம் உபரி நிதி அதிகமாகவே இருக்கின்றது. அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையின் உற்பத்தி ஜூலை மாதத்தில் 9.4 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. லோ பேஸ் எபக்ட் மூலமாக சென்ற வருடத்தை விடவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இரண்டாவது நோய்த்தொற்று அலையின் தாக்கம் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் நிறைந்து இருக்கின்ற காரணத்தால், நாட்டில் பற்றாக்குறை சற்று கூடுதலாகவே அதிகரித்து இருக்கின்ற காரணத்தாலும் இந்தியாவின் மிக முக்கிய 8 உற்பத்தித்துறையில் 7 துறைகள் வளர்ச்சியில் இருக்கிறது.

ஜூலை மாத தரவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த 8 உற்பத்தி துறைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி துறையில் மட்டுமே சரிவில் இருக்கிறது இந்தியா முழுவதும் கட்டுமானத் திட்டங்கள் வேகமெடுத்து இருக்கின்ற சூழ்நிலையில், துறை 21.8 சதவீதம் ஸ்டீல் துறை 9.3 சதவீதம் வளர்ச்சியை கொண்டிருக்கிறது.

Previous articleஜியோ வின் புதிய அதிரடி ஆஃபர்கள் அறிமுகம்! இதனால் யாருக்கு என்ன பயன்?
Next articleபிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!