பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

0
82

மத்திய அரசு பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னரே இந்த இணைப்பிற்கு காலவரையறை நீட்டிக்கப்பட்டது.

ஆகவே ஒரு சில நிமிடங்களில் அமர்ந்த இடத்திலேயே பிஎஃப் கணக்கின் யு ஏ என் எண் இணைப்பது எவ்வாறு என்பதை இப்போது நாம் காணலாம். முதலில் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய யுஏஎன் என்னை பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து உள்ளே நுழையுங்கள்.

மெனுவில் இருக்கும் மேனேஜ் என்பதை கிளிக் செய்துவிட்டு கேஒய்சி கிளிக் செய்யுங்கள், கிளிக் செய்தவுடன் புதிய பக்கத்திற்கு செல்லும். அந்தப் பக்கத்தில் நீங்கள் முன்னரே ஆதார் எண்ணை இணைத்து இருந்தால் எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.

ஆதார் எண் இல்லை என்றால் ஆதார் என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண்ணை அதில் பதிவிடுங்கள், ஆதார் எண்ணை பதிவிடுங்கள் அதன் பின்னர் சேவை என்பதை அழுத்தி கிளிக் செய்யுங்கள். சேவ் பட்டனை க்ளிக் செய்தவுடன் ஆதார தரவுகளில் பெயர் பிறந்த நாள் உள்ளிட்டவற்றை சரிபார்க்கப்படும்.

எல்லாவிதமான தரவுகளும் சரியாக இருக்கும் அதனால் செய்யப்பட்ட சேவை சி அறிக்கை உள்ளிட்டவற்றை நீங்கள் பெறுவீர்கள்.