நண்பர்களுடன் பேச சென்ற நபர் கழுத்தறுபட்டு படுகொலை! 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

பெரம்பலூரில் பிரபல ரவுடி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே இருக்கக்கூடிய திருநகர் பகுதியில் வசித்து வந்தவர் வீரமணிகண்டன்.இவர் அதே பகுதியில் இருக்கக்கூடிய தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன.

இவர் அடிக்கடி அப்பகுதி மக்களுடன் மோதலிலும் ஈடுபடுவதும் உண்டு. இந்நிலையில் நேற்று பணியை முடித்துவிட்டு வீரமணி வீட்டிற்குத் திரும்ப இரவு ஒன்பது மணிக்கு மேல் சிலர் அவரை வெளியே வருமாறு அழைத்து பேசுவதற்காக கூட்டிச் சென்றனர். ஆனால் போனவர் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை தேடி வெளியே செல்கையில், அவர் வசித்து வரும் வீட்டின் தெருமுனை ஓரத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ந்து போன அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த விரைந்த அதிகாரிகள் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த கொலை தொடர்பாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க, புகாரின் அடிப்படையில், விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர், கண்ணன், முருகானந்தம், பார்த்திபன் ஆகிய 3 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, வீரமணியை கொலை செய்தது யார் ? அவர் என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்?  சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.