கொத்துகொத்தாக சிக்கிய மீன்கள்! சமூகஇடைவெளியை மறந்து களைகட்டிய மீன் விற்பனை!

0
80

70 நாட்களுக்கு பிறகு மீன்படிக்க செல்ல ஏராளமான மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஊரடங்கு மற்றும் மீன் பிடிப்பதற்கான தடைக் காலம் முடிவடைந்ததையடுத்து தெற்கு துறைமுக பகுதியை சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 250க்கும் மேற்பட்டவர்கள் சென்று மீன்களை பிடித்து வரச் சென்றனர்.  70 நாட்களுக்குப் பிறகு , சென்ற அவர்களுக்கு ஏராளமான மீன்கள் கொத்து கொத்தாக  மாட்டின.

மீனவர்களின் வலையில் விளை, நகரை, முண்டாக்கன்னிபாறை, பாரை  உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கியுள்ளன. ஊராடங்கிற்கு முன் வரை வெறிசோடி காணப்பட்ட தெற்கு துறைமுகம் மீனவர்கள் பிடித்து வந்து மீன்களை விற்க கடை அமைத்தவுடன் கூட்டம் அலைமோதியது.

மீன் வாங்க வந்த அனைவரும் முககவசம் அணிந்திருந்தாலும், மீன் வாங்குவதில் ஆர்வம் காட்ட சமூக இடைவெளியை முற்றிலும் மறந்து விட்டனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், மீன் விலை தாறுமாறாக அதிகரித்து காணப்படுகிறது.  வரக்கூடிய காலத்திலும், இதே போன்று மீன்கள் வரத்து அதிகம் காணப்பட்டால் மீன்களின் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.