உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் மீன் எண்ணெய் மாத்திரை!! தினம் ஒன்று சாப்பிட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

Photo of author

By Divya

உடல் நலத்தை பேணி பாதுகாக்கும் மீன் எண்ணெய் மாத்திரை!! தினம் ஒன்று சாப்பிட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

Divya

அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மீன்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமப் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது.

இது தவிர மீனில் கால்சியம்,இரும்பு,புரதம்,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.மீன் உணவு என்றாலே சிலருக்கு அலாதி பிரியமாக இருக்கிறது.மீன் ப்ரை,மீன் வறுவல்,மீன் புளி குழம்பு என்று வகை வகையான உணவுகளை பலரும் விரும்புகின்றனர்.இருப்பினும் அசைவப் பிரியர்களின் சிலருக்கு மீன் அலர்ஜியாக இருக்கலாம்.சிலருக்கு மீன் வாடையே ஆகாது.அப்படி இருப்பவர்களால் மீனில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை பெற முடிவதில்லை.அவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டால் மீனிற்கு இணையான சத்துக்களை பெறலாம்.

மீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்:

1)இந்த மாத்திரையை உட்கொண்டால் சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.மீன் எண்ணெய் மாத்திரை சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் தசைகள் வலிமையாகும்.மீன் மாத்திரை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.

3)மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொண்டால் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.நினைவாற்றல் அதிகரிக்க மீன் எண்ணெய் மாத்திரை உதவுகிறது.

4)மூட்டு வலிக்கு நிவாரணம் கிடைக்க மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்ளலாம்.மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூட்டு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

5)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைய மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொள்ளலாம்.

6)மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள வைட்டமின் ஏ மாத்திரை கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.

7)மீன் எண்ணெய் மாத்திரையை உட்கொண்டால் அல்சர் புண்கள் குணமாகும்.மாரடைப்பு அபாயம் குறைய மீன் எண்ணெய் மாத்திரை தொடர்ந்து உட்கொள்ளலாம்.