மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

Photo of author

By CineDesk

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

CineDesk

Fishermen banned from going to sea!! Fisheries department alert!!

மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!! மீனவளத்துறை எச்சரிக்கை!!

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சில பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதாவது, கடலூர் துறைமுகத்தில் சோனாங்குப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. அதில், வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் பைபர் மற்றும் திசை படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள்.

தற்போது தமிழக வங்கக் கடல் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இதன் காரணமாக கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் விசை மற்றும் பைபர் உள்ளிட்ட படகுகளை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்க செல்ல கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றம் சரியானவுடன் மறு அறிவிப்பு விடப்படும். அதன் பிறகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு மீனவர்கள் ஒத்துழைப்பு தருமாறு கடலூர் மீன்வளத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் மீனவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சேலம், நீலகிரி, சென்னை, கோவை மற்றும் கடலோர பகுதிகள்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.