திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!..
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த காற்றின் காரணமாக திடிரென கடலில் கவிழ்ந்தது.
இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததை பார்த்த சக மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்றினர். மேலும் அஸ்வின் மற்றும் பிரசாத் ஆகியோரை தேடியும் இவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.நேற்று முன்தினம் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான 2 கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் மூலமும் மாயமான 2 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில் எங்கு தேடியும் மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 3ஆவது நாளாக நேற்றும் கப்பல்கள், விமானம், ஹெலிகாப்டர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் படகில் சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.இப்பணி இரவு வரை நீடித்தது. ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை.
இன்று வியாழக்கிழமை திருச்செந்தூர் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 120 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு நீடித்து வருகிறது.