சமீபத்தில் கடலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் பின் வருமாறு ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிய அரசு மாநில அரசின் நிதிகளை மதவெறிக்காகவும், சமஸ்கிருத,இந்தி மொழி திணிப்பிற்காகவும் வீண்செலவு செய்கின்றனர். ஒன்றிய அரசின் பி எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததனால் தமிழக அரசு 5 கோடி ரூபாயை இழக்கிறது என்று தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். தமிழக அரசு கொடுக்கும் வரி மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்று கூற ஒரு நிமிடம் ஆகாது. மாநில அரசு மத்திய அரசு இணைந்து செயலாற்றுவதே கூட்டாட்சி தர்மம். அதை மனதில் கொண்டு பொறுமையாக இருக்கிறோம்.
ஹிந்தி மொழி திணிப்பை இவ்வளவு தீவிரமாக எடுத்துரைக்கும் பிரதான் அவர்களுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வியை வளர்ப்பதற்காக அடிப்படையாக அமைய வேண்டும் ஆனால் தற்சமயம் மொழி திணிப்பு நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. தாய் மொழியை வளர்க்கப் போவதாக சொல்கிறீர்! தாய்மொழியான தமிழை வளர்ப்பதற்கு எங்களுக்கு தெரியும். ஹிந்தி மொழி திணிப்பால் எங்கள் தாய் மொழி அருமை எங்களுக்கு தெரியாமல் போய் விடாது. மேலும் எங்கள் தாய் மொழி தமிழ் உங்களிடம் வந்து கையேந்துவது கிடையவே கிடையாது.
தேன் கூட்டில் கல்லை எரிந்து பின்னர் தமிழகத்தின் தனித்துவ தன்மையை வெளிக்கொண்டு வந்து விடாதீர்கள்! தமிழ்நாடு மற்றும் தமிழுக்கு எதிரானக் கொள்கைகளை ஒருபோதும் நான் மற்றும் திராவிட மாடல் கட்சி இருக்கும் வரை அரங்கேற விடமாட்டோம். நாங்கள் முழுக்க மக்களின் முன்னேற்றத்தை ஒரு புறமாகவும், முன்னேற்றத்தை தடுக்கும் தடைகளை உடைத்து எறிவது ஒரு பக்கமாகும் திறன் பட செயலாற்றி வருகிறோம். தடைகளை உடைப்பதற்கு நாங்கள் என்றும் அஞ்சியதே கிடையாது! மக்களுடைய ஆதரவால் எங்களின் வெற்றி தொடரும் என்று உரையை முடித்துள்ளார்.