ஐந்து நாட்கள் கால அவகாசம்! ரூ. 5000 வரை ஊக்கத்தொகை!! மிஸ் பண்ணிடாதிங்க… சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
சொத்து வரி செலுத்துவது குறித்த சென்னை மாநகராட்சி ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சொத்து உரிமையாளர்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை அரையாண்டிற்குள் அதாவது 30.09.2022 க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துபவர்கள், முதல் பதினைந்து நாட்களுக்குள் செலுத்தி விட்டால், அவர்களுக்கு ஐந்தாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல செலுத்தியவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளனர்.
தற்பொழுது வரை இது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் அரையாண்டிற்கான வரி செலுத்த வேண்டும். முதல் அரையாண்டு போலவே தற்பொழுதும் முதல் 15 தேதிக்குள் வரியை செலுத்தி விட்டால் அவர்களுக்கு ஐயாயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துரிமையாளர்கள் 01.10.2022 ஆகிய தினத்திலிருந்து 15 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தியவர்களுக்கு இந்த ஊதிய தொகை கிடைக்கும். தற்பொழுது வரை இரண்டாம் அரையாண்டு சொத்து வரியில் 13 லட்சம் பேர் செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு 1.25 கோடி வரை ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டுள்ளது.