தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!
தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸின் துணை வைரஸான பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
அங்கு தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் 5000 பேர் உயிரிழப்பதாகவும் செய்திகள் வெளி வந்தன. கொரோனா அங்கு பரவியதும் உலகெங்கும் உள்ள நாடுகள் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இந்தியாவிலும் மத்திய சுகாதாரத்துறை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் மூலமாக கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது. அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வைரஸ் கட்டுக்குள் வந்தது. இருப்பினும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொற்றுகள் பரவி வந்தன.
இதையடுத்து கடந்த ஜனவரி 26 ஆம்தேதி சென்னை, கோவை உட்பட ஐந்து மாவட்டங்களில் 4 ஆண்கள், 3 பெண்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மற்ற மாவட்டங்களில் எவ்வித பாதிப்பும் இல்லை.
நேற்று பாதிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் இன்று சென்னை திருவள்ளுவர் உட்பட 4 மாவட்டங்களில் 3 ஆண்கள் 2 பெண்கள் என மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மற்ற 34 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனாவினால் எந்த உயிரிழப்பும் இல்லை.
மேற்கண்ட தகவல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.