நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

0
155

நீங்கள் பிக்ஸட் டெபாசிட் செய்திருக்கிறீர்களா? உங்களுக்கு இந்த பட்ஜெட்டில் நற்செய்தி!

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமனால் இன்று காலை தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தை அடுத்து இரண்டாவது முறையாக் இன்று பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் நிறை குறைகளோடு விமர்சனம் செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய தர மக்களுக்கான ஒரு சிறப்பான அறிவிப்பை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது.

மத்திய வர்க்க மக்களின் நம்பிக்கையான முதலீடு என்றால் அது வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்தான். வட்டி குறைவாக இருந்தாலும் அதில் முதலீடு செய்த பணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. இந்த டெபாசிட்களுக்கு தொகைக்கும் காலத்துக்கும் ஏற்றவாறு வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

ஒருவேளை நாம் பிக்சட் டெபாசிட் செய்த வங்கி திவாலானாலோ அல்லது வேறு காரணங்களுக்காக இயங்காமல் போனாலோ டெபாசிட் தாரர்களுக்கு  குறைந்தபட்ச ஷ்யூரிட்டி தொகையாக ஒரு லட்ச ரூபாய் வரைத் தரும். நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்திருந்தாலும் ஒரு லட்ச ரூபாய்தான். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இந்த இழப்பீட்டுத் தொகை ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் பிக்ஸட் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே தனிநபர் வருமான வரி விலக்கு தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Previous articleஅந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி
Next articleநஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!