நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

0
103

நஷ்ட ஈடு கேட்பவர்கள் ஆபிஸ் ரூம் வரவும்:ரஜினிக்காக அழகிரி டிவீட்!

தர்பார் படம் தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விநியோகஸ்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி ரஜினிக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார்.

பெரிய நடிகர்கள் படங்கள் ரிலிஸாகும் அதை அதிக விலைக்கு வாங்கி அதிக டிக்கெட் கட்டணத்தில் விற்று அதிக லாபம் பார்க்கலாம் என விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டு கையை சுட்டுக் கொள்வது வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலை இப்போது தர்பார் படத்துக்கு வருமோ என்ற சூழல் உருவாகியுள்ளது.

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான தர்பார் முதல் நாளிலேயே எதிர்மறை விமர்சனங்கள் பெற்றதால் கூட்டம் குறைய ஆரம்பித்தது. முதல் நாளின் மாலை மற்றும் இரவு காட்சிகளில் டிக்கெட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் முதல்நாள் வசூல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் சிற்ப்புக்காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது அனுமதிக்க பட்ட விலையை பல மடங்கு அதிகமாகும்.

இப்போது பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தர்பார் படம் தூக்கப்பட்ட நிலையில் கணக்கு பார்த்தால் விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைத் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் விநியோகஸ்தர்கள் அனைவரும் கூட்டம் போட்டு நஷ்ட ஈடு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஆனால் மற்றொரு தரப்பினரோ தர்பார் நல்ல லாபம் கொடுத்த படம்தான் என்றும் விநியோகஸ்தர்கள் வேண்டுமென்றே ரஜினிக்கு களங்கம் விளைவிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விநியோகஸ்தர் பொய்க்கணக்கு காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் நீண்டகால நண்பரும் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் மகனுமான மு க அழகிரி இந்த விஷயத்தில் ரஜினிக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டிவிட்டில் ‘நஷ்ட ஈடு கேட்பவர்களை ஆபிஸ் ரூம் அன்புடன் அழைக்கிறது’ எனவும் மிரட்டும் விதமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆபிஸ் ரூம் என்பது சிவாஜி படத்தில் ரஜினி அடியாட்களை வைத்து வெளுத்து வாங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K