FLASH: மின்சார கட்டணம் அடுத்து பேருந்து கட்டணம் உயர்வு.. அமைச்சர் கொடுத்த உறுதி!!
திமுக ஆட்சிக்கு வந்ததும் விலைவாசியானது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதற்கு உதாரணமாக முன் தினம் தமிழக அரசானது மின்சாரம் கட்டணத்தை உயர்த்தியதை கூறலாம். அந்த வகையில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என்ற பேச்சு அடிபட்டு வந்ததற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, பேருந்துகள் பல பழுதடைந்தும் பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல் இருந்ததால் நடந்து முடிந்த சட்டப் பேரவையில் 7,200 பேருந்துகள் புதியதாக கொள்முதல் செய்யப்படும் என்று கூறினர். அதேபோல செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தபடியே தற்பொழுது முதலாவதாக 1300 பேருந்துகள் புதியதாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள பேருந்துகள் தயாரிக்கப்படும் பட்சத்தில் அதனையும் நடைமுறைப்படுத்தப்படும். தற்பொழுது மின் கட்டணம் உயர்த்தியதால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பேருந்து கட்டணமும் உயரும் என்று கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவதற்கு நாங்கள் பதில் கூற வேண்டும் என்று அவசியம் இல்லை. பேருந்து கட்டணத்தை உயர்த்தும் நோக்கில் எந்த ஒரு உத்தேசமும் தற்போது இல்லை. அதேபோல போக்குவரத்து துறையில் 685 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் காலியாக இருந்ததை நிவர்த்தி அடைத்துள்ளோம்.
அதேபோல ஜெர்மனி நிதி வங்கியிடமிருந்து கடன் பெற்று மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய உள்ளோம். அதன்படி முதலில் 100 பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிலும் முதலாவதாக சென்னையில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் கூறினார். அதேபோல பேருந்து கட்டணம் உயர்வது குறித்து தெளிவான விளக்கம் அமைச்சர் அளிக்காததால் மேற்கொண்டு பேருந்து கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக பலர் கூறுகின்றனர்.