FLASH: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து விஜய் வெளியிட்ட முக்கிய தகவல்!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அவரது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கும் பொழுதே இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கும்பலானது இவரை சரமாரியாக தாக்கியது.இவ்வாறு தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆர்ம்ஸ்ட்ராங்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.மேற்கொண்டு அவரது உடலானது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னணியாக ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கு இருப்பதாக கூறுகின்றனர்.ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தது குறித்து பல தரப்பினர் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை கூறியுள்ளார்.அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
https://x.com/tvkvijayhq/status/1809415002295836977
சட்ட ஒழுங்கு நிலையானதாக இல்லை என்பதை இதன் மூலம் விஜய் தெரிவித்துள்ளார்.வரும் நாட்களில் திமுக வை நேரடியாக எதிர்ப்பது போலவே இவரது அனைத்து பதிவுகளும் உள்ளது.