FLASH:ரேஷன் அட்டைதாரர்களுக்கு குஷியோ குஷி.. வரப்போகும் தேங்காய் எண்ணெய் திட்டம்!!
தமிழகத்தின் தொழில்த்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கோத்ரேஜ் குழுமம் சார்பில் சில நலத்த்திட்டங்களை அறிவித்தார். அதில் அவர் பேசியபோது நியாய விலை கடைகளில் பாமாயில் விற்பனை செய்வதற்காக பனை விவசாயிகளுக்கு தேவையான பனை விதைகள், உரங்கள் மற்றும் களை எடுப்பதற்கான கருவிகள் போன்றவை அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.
மேலும் அவர் பேசியதாவது இந்தியாவில் 22 சதவிகிதம் பாமாயில் உற்ப்பத்தி செய்வதாகவும் 60 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் மேலும் இந்தியாவில் பாமாயிலுக்கு நல்ல விலை கிடைப்பதாகவும் கூறினார்.
வரும் காலங்களில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை இவைகளுடன் சேர்த்து தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவைகள் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என கூறினார்.
இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையுமென்றும். இதனால் தென்னை விவசாயிகள் தங்களின் உற்பத்தியை அதிகரிக்கலாமென்றும் கூறினார். இதைப்பற்றி தென்னை விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். அதே போல் ரேஷன் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டம். அரிசியுடன் சேர்த்து சிருதானியாங்களும் சேர்க்கப்பட வேண்டும். இது மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது போன்று பல கோரிக்கைகளை மக்கள் விடுத்துள்ளனர். கூடிய விரைவில் தமிழக அரசு நற்செய்தியை வழங்குமென எதிர்ப்பார்கப்படுகிறது.