FLASH: நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது உண்மைத்தான் – மத்திய அரசு பகீர் தகவல்!!
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வானது வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இதனை முழுமையாக ரத்து செய்யும் படியும் கூறி வருகின்றனர்.மேலும் நடைப்பெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து பலர் இந்த தேர்வில் முழு தேர்ச்சி அடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி நீட் வினாத்தாள் கசிந்து விட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இது சம்பந்தமாக தேர்வு குழுவிலுள்ள சிலரை கைது செய்யவும் நேரிட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் படியும் மறுத்தேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் குவிந்த வண்ணமாக உள்ளது.அந்தவகையில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவசரகால நடவடிக்கையாக நீட் விலக்கு மசோதாவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில் நீட் வினாத்தாள் கசிவு வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.அதில் மே ஐந்தாம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அதனை ஒப்புக் கொண்டுள்ளது.மேற்கொண்டு இந்த வினாத்தாளானது அனைத்து இடங்களிலும் கசியவில்லை எனவும், குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்ததாக கூறுகின்றனர்.தற்பொழுது எழுதிய இந்த நீட் தேர்வானது ரத்து செய்வது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.