FLASH: பேருந்து கட்டணம் குறித்து புதிய அறிவிப்பு!! அமைச்சர் வெளியிட்ட திடீர் தகவல்!!
தமிழக அரசானது போக்குவரத்து துறை ரீதியாக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி வங்கியின் நிதி உதவியுடன் புதியதாக பேருந்துகளை கொள்முதல் செய்ய உள்ளது. இந்நிலையில் மேற்கொண்டு இரண்டு புதிய அறிவிப்புகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். போக்குவரத்து துறை ஊழியர்கள் சமீப காலமாக போராட்டம் நடத்துவதும் புகாரளிப்பதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.குறிப்பாக தங்கள் சம்பள கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும் பணமானது எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்னிறுத்தினர்.
எங்களது பிஎஃப் கணக்கிற்க்கும் இந்த பணம் செல்லாமல் எங்களுக்கும் கொடுக்காமல் இந்த பணம் ஏன் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று பலமுறை புகார் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி பயணிகளுக்கு போதுமான வகையில் பாதுகாப்பு அளிக்காதவாறு பல பேருந்துகள் செயல்பட்டு வருவதாகவும் கூறினர். சமீபத்தில் கூட பேருந்தின் மேற்கூரை மேல், கட்டவுட் ஒன்று கட்டப்பட்டு அதில் ஏராளமான பயணிகள் சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. இதனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இதனை சுட்டிக்காட்டி அனைத்தையும் மாற்றம் செய்யும் படி அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அறிக்கை வெளியிட்ட ஓரிரு நாட்களிலேயே புது உதிரி பாகங்கள் பேருந்துகள் வாங்குவதாக தமிழக அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் மேற்கொண்டு புதிய அறிவிப்புகளை போக்குவரத்துக் கழக துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் ஒரு பொழுதும் பேருந்து கட்டணம் உயர்த்துவதில்லை. இதர மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப பேருந்து கட்டணம் உயர்வு இருக்கும் ஆனால் முதல்வர் இதனை ஒருபோதும் செய்வதில்லை. அதேபோல புதியதாக 7500 பேருந்துகள் வாங்குவதற்கும் முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பேருந்துகளானது நவீனமாயமாக்கப்பட்டு மொபைல் போன் சார்ஜ் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளும் நோக்கில் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.