FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!  

Photo of author

By Rupa

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ஆம் தேதி முன்விரோத காரணமாக கொலை செய்தனர். இதன் கீழ் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர் பிடியில் தற்பொழுது 25 பேர் உள்ளனர். இதன் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக பல முக்கிய தலைகள் இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து அதிமுக பாஜக என பல பிரமுகர்கள் தலியீடும் உள்ளது. பிரபல ரவுடியின் காதலியான அஞ்சலை உள்ளிட்டோர் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆருத்ரா பண மோசடி வழக்கில் ஆம்ஸ்ட்ராங் தலையிட்டதாக கூறிவந்த நிலையில் தற்பொழுது நிலத்தகராறு என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் வழக்கறிஞர் அஸ்வத்தமானுடன் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நிலத்தகராறு ஏற்பட்டதாகவும் இதனை முடித்துக் கட்டும் விதமாக சிறையில் இருந்த நாகேந்திரன் வெளியில் எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இருப்பினும் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் யாரும் உண்மையானவர்கள் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆணித்தரமாக கூறி வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து நேற்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எந்த ஒரு அனுமதியும் வாங்கவில்லை என்று தற்பொழுது நுங்கம்பாக்கம் போலீசார் ஆம்ஸ்ட்ராங் மனைவி, இயக்குனர் பா ரஞ்சித் மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.