FLASH: ஒருவருக்கு 1 சரக்கு பாட்டில் தான்.. வரப்போகும் ரூல்ஸ்!! மதுப்பிரியர்களுக்கு போடப்படும் கெடுபிடி!!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அடுத்து அரசு மதுபான கடைகளில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.மேற்கொண்டு இது குறித்து அவர் கூறுகையில், அரசிடமிருந்து எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை முதலில் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் மதிப்புடன் நடத்த வேண்டும்.
மேலும் சரக்கு பதுக்குவதை தடுப்பதற்கு தீவிரமான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும்.குறிப்பாக மதுபானம் வாங்க வருபவர்கள் ஒன்று அல்லது இரண்டு பாட்டில்களுக்கு மேல் வாங்குவதில்லை இதுவே பார் வசதி இருக்கும் இடத்தில் வந்து மது அருந்துபவர்கள், ஊழியர்களிடம் நேரடியாகவே இத்தனை பாட்டில்கள் வேண்டும் என்று கூறி விடுகின்றனர்.
மேற்கொண்டு ஊழியர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மூன்று நான்கு பாட்டில்களுக்கு மேல் கொடுக்கின்றனர்.இதனை வாடிக்கையாளர்கள் தான் வாங்குகிறார்களா அல்லது ஊழியர்கள் இவர்களிடம் கொடுத்து பதுக்கி வெளியில் விற்கிறார்களா என்பது தெரியவில்லை.இதனை ஒழுங்குமுறை படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.
அதேபோல கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் டாஸ்மாக் நிர்வாகம் எந்த ஒரு பணிபுரியும் ஊழியர்களுக்கும் சரக்கு கொடுக்கக் கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் அதனையும் மீறி பாரில் பணிப்புரிபவர்கள் கள்ளச் சந்தையில் விற்பதற்காக எடுத்துச் செல்கின்றனர்.இதனை டாஸ்மாக் நிர்வாகம் கண்டித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.ஆனால் இதில் எந்த சம்பந்தமும் இல்லாமலிருக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் இதற்கு காரணமாகிவிடுகின்றனர்.
இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.மேலும் தமிழக அரசு ஒருவருக்கு இத்தனை பாட்டில்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் விதிக்கப்படாததால் யாரேனும் ஒட்டுமொத்தமாக வாங்கி முறைகேட்டில் ஈடுபடுவதாக இருந்தால் கட்டாயம் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம்.அதிலும் கடை ஊழியருக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
மேற்கொண்டு இவ்வாறான குற்றங்கள் அரங்கேறாமல் இருக்க விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும்.வரும் நாட்களில் ஒருவருக்கு இத்தனை பாட்டில்கள்தான் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை வகுத்தால் இவ்வாறான கள்ளச்சந்தை வியாபாரத்தை தடுக்க முடியும்.