FLASH: டெல்லிக்கு திடீர் விசிட்.. மீண்டும் தமிழக ஆளுநராகப் போகும் ஆர் என் ரவி!!

FLASH: டெல்லிக்கு திடீர் விசிட்.. மீண்டும் தமிழக ஆளுநராகப் போகும் ஆர் என் ரவி!!

தமிழகத்தில் ஆளுநராக இருக்கும் ஆர் என் ரவியின் பதவிக்காலமானது அடுத்த மாதம் இறுதியில் முடிவடைய உள்ளது. இவர் முதன்முதலாக நாகலாந்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். கிட்டத்தட்ட நாகலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் 3 வருடம் என அவரது 5 ஆண்டு கால பதவியானது முடிவடைய உள்ளது. இச்சமயத்தில் தான் தமிழகத்தின்  அடுத்த ஆளுநர் யாராக இருக்கும்? இல்லை ஆர் என் ரவியே பதவி நீட்டிப்பு செய்வாரா என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுக விற்கும் ஆளுநருக்கும் எப்பொழுதும் போர் இருந்து கொண்டே தான் இருக்கும். நீட் தேர்வு என ஆரம்பித்து ஆன்லைன் விளையாட்டு வரை பலவற்றிற்கும் அவசரகால மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஆளும் கட்சியானது கொந்தளிப்பில் “கெட் அவுட் ரவி” உள்ளிட்ட வாசகங்களை டேக் செய்து இணையத்தில் வைரலாக்கினர். அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு பணியாற்றி மாநில அரசின் தேவைகளை கவனிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில் ஆளுநர் மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பில் திமுக உள்ளது. ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளுநர் ஆர்.என் ரவியே பதவி நீட்டிப்பு செய்வார் என தலைமை வட்டாரம் கூறுகிறது. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஆர் என் ரவி டெல்லி சென்று, அமித்ரா மற்றும் மோடியை சந்தித்து வந்ததாகவும் கூறுகின்றனர். ஆனால் எக்ஸ் தளத்தில் ஆளுநர் ரவி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் உள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து அவர்களிடம் பேசியதாக கூறினார்.

ஆனால் இவர் டெல்லி நான்கு நாள் பயணம் சென்றது கட்டாயம் இவரது பதவி குறித்து பேச தான் என பலரும் கூறுகின்றனர். இதே போல கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்களிலும் ஆளுநர் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இவை அனைத்திற்கும் ஒருமித்த ஆலோசனை நடத்தி பதவி நியமனம் செய்ய உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவி பதவி நீட்டிப்பு செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.