FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!!
தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் நியாய விலை கடை மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அரசு, கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அரிசி பருப்பு, உள்ளிட்டவற்றை மலிவு விலையில் மக்களுக்கு கொடுக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் பருப்பு தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை ஆராய்ந்து இதன் தேவைகளை தற்பொழுது தமிழக அரசானது நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் 5 கோடி பேருக்கு இந்த ரேஷன் கடை மூலம் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தகுதி வாய்ந்தும் சில ரேஷன் அட்டை தாரர்கள் கடைக்கு வந்து எந்த ஒரு பொருட்களையும் வாங்குவதில்லை. இவர்களுக்காக கால அவகாசம் ஆறு மாதம் என நிர்ணயித்துள்ளனர். ஆறு மாதத்திற்கு மேல் நியாய விலை கடைகளுக்கு வெளியே பொருட்கள் வாங்காதவர்களின் பெயர் கொண்டு போஸ்டர் ஒட்டப்படும்.
இதனை பார்ப்பவர்கள் வாங்காத நபர்களிடம் தகவல் கூறி மீண்டும் பொருட்கள் வாங்க வழி அமைக்கப்படும். அச்சமயத்திலும் அந்த கார்டு தாரர்கள் பொருட்கள் வாங்க வரவில்லை என்றால் அவர்களின் பெயர் தகுதி பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்படும். இவ்வாறு ரேஷன் அட்டை நீக்கம் செய்யப்பட்டு அடுத்தப்படியாக காத்திருப்பு நிலையில் இருப்பவர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனக் கூறியுள்ளனர். இதற்கு உணவு வழங்கல் துறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. இது மத்திய பிரதேசத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலத்திலும் நடைமுறைக்கு வரும் என்று கூறுகின்றனர்.ரேஷன் பொருட்களை முறையாக வாங்கவில்லை என்றால் அந்த அட்டை நிராகரிக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர்.