இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

0
195

இந்தப் பகுதிகளுக்கு செல்லும் விமானம் மற்றும் ரயில் கட்டணங்கள் அதிரடி உயர்வு! பயணிகள் கடும் அவதி!

தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் அனைவரும் விடுமுறையில் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. விமானங்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ள அதே நேரத்தில் முக்கிய நகரங்களுக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியாத சூழலும் இருந்து வருகின்றது. பாட்னா, லக்னோ, கோரக்பூர், தியோகர், தர்பாங்க ,வாரணாசி போன்ற நகரங்களுக்கான டிக்கெட் உறுதி செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

தசரா ,தீபாவளி போன்ற பண்டிகைகள் வருவதற்கு முன்பே ரயில் மற்றும் விமான பயண கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது வழக்கமான நாட்களில் வசூல்  செய்யப்படும் கட்டணங்களை காட்டிலும் பண்டிகை காலத்தில் வசூல் செய்யப்படும் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களில்  5,000 ரூபாய்  முதல் 6000 ரூபாய் வரை இருந்த விமான கட்டணம் தற்போது 13,000 ரூபாய்  முதல் 15,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. டெல்லி   போன்ற நகரங்களுக்கு செல்ல விமான டிக்கெட் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Previous articleகுடும்பத்தில் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை! மக்களிடையே பரபரப்பு!
Next articleஅதிகார திமிரோடும் செயல்படும் திமுகவினரின் ஆணவமும் ஆட்சியும் முடிவுறும் நாள் வெகுதொலைவில் இல்லை – சீமான் கொந்தளிப்பு