ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

Photo of author

By Rupa

ரத்த நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு! மிதக்கும் இந்தோனேசியா!

இந்தோனேசியாவில் ஜாவா எனும் தீவில் ஜெயிங்கோட் கிராமம் உள்ளது.இங்கு 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.ஜெயிங்கோட் கிராமம்,ஆடைகளை வடிவமைப்பதில் வல்லமை பெற்றது.குறிப்பாக பழங்கால முறையில்  ஆடைகளை தயாரிப்பதில் பேர் போனது.அவர்கள் தயாரிக்கும் ஆடைகளின் ரசாயனம் வெள்ளத்தில் கலந்து ஊர் முழுவதும் ரத்த நிறத்தில் மாறியது.

அருகாமையில் இருக்கும் ஊர்களில் மஞ்சள் நிறத்தில் வெள்ள பெருக்கு தோன்றியது.அங்குள்ள ரசாயன கழிவுகள் நீரில் கலப்பதால் இவ்வாறு ஏற்படுகிறது என அந்நாட்டின் சார்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்படுகிறது.இந்த சிவப்பு நிற வெள்ளப்பெருக்கின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அச்சமின்றி ரத்த நிறத்தில் உள்ள இந்த வெள்ளப்பெருக்கில் நடந்து செல்கின்றனர்.