உங்களுக்கு நுரை போன்று சிறுநீர் வெளியேறுகிறது என்றால் அது சிறுநீரகப் பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்கலாம்.நாம் கழிக்கும் சிறுநீரின் தன்மையை பொறுத்து தான் நம் ஆரோக்கிய நிலை இருக்கிறது.
உங்களுக்கு அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் அவை சிறுநீரக அபாயத்தை குறிக்கிறது.எரிச்சல் மற்றும் வலியுடன் சிறுநீர் வெளியேறினால் அது சிறுநீரக பாதை தொற்று இருப்பதற்கான அறிகுறியாகும்.
சிறுநீர் நுரைத்து வர காரணம்:-
1)சிறுநீரக பிரச்சனை
2)சிறுநீர் பாதை தொற்று
3)அதிக படியான புரதம் தேங்குதல்
4)தைராய்டு பாதிப்பு
தொடர்ந்து சிறுநீர் நுரைத்து வருகிறது என்றால் அலட்சியம் கொள்ள வேண்டும்.இது சிறுநீரக செயலிழப்பிற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.சிறுநீரக செயலிழப்பை சரி செய்ய பார்லி கஞ்சி செய்து பருகலாம்.
நுரைத்த சிறுநீர் பிரச்சனையை சரி செய்ய உதவும் பார்லி கஞ்சி செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
பார்லி கஞ்சி செய்முறை:
தேவைப்படும் பொருட்கள்:
*பார்லி அரிசி – 50 கிராம்
*பீன்ஸ் – இரண்டு
*வெள்ளைபூண்டு – இரண்டு
*சீரகம் – அரை தேக்கரண்டி
*இஞ்சி – ஒரு சிறிய துண்டு
*கேரட் – ஒன்று
*உப்பு – சிறிதளவு
*தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் 50 கிராம் பார்லி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டெப் 02:
அடுத்து இந்த பார்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி வெந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டெப் 03:
அதன் பிறகு ஒரு கேரட் மற்றும் இரண்டு பீன்ஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அடுத்து பூண்டு பற்கள் மற்றும் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை கொதிக்கும் பார்லி கஞ்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 04:
அடுத்து அதில் அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்கவிட வேண்டும்.இறுதியாக சிறிதளவு உப்பு சேர்த்து பார்லி கஞ்சியை இறக்க வேண்டும்.இந்த கஞ்சியை குடித்து வந்தால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.பார்லி கஞ்சி மட்டுமின்றி பார்லி ஊறவைத்த நீரை பருகி வந்தாலும் சிறுநீரகம் சம்மந்தபட்ட பாதிப்புகள் குணமாகும்.