நமது குடலில் தேவையற்ற கழிவுகள் அதிகமாக தேங்கினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.சாப்பிடும் உணவு செரிமானம் செய்யப்பட்ட பிறகு கழிவுகள் மலமாக வெளியேறுவது வழக்கம்.இந்த செயல்முறை சீராக நடந்தால் தான் உடலிலுள்ள ஒட்டுமொத்த உறுப்பின் ஆரோக்கியமும் மேம்படும்.அப்படி இருக்கையில் இந்த ப்ராசஸ் சரியாக நடக்கவில்லை என்றால் வாயுத் தொல்லை,மலச்சிக்கல்,பைல்ஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வயிற்றில் தேவையற்ற கழிவுகள் தேங்கினால் வாய் துர்நாற்றம் மற்றும் துர்நாற்றம் கொண்ட வாயுக்கள் அதிகமாக வெளியேறும்.
வயிறு வீங்குதல்,வயிறு வலி போன்ற பாதிப்புகள் குடல் கழிவுகளால்தான் ஏற்படுகிறது.குடலில் அதிகப்படியான கழிவுகள் தேங்கி இருந்தால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகிவிடும்.குடல் புழுக்கள்,குடல் அலர்ஜி நோய்கள் குடல் கழிவுகளால் தான் ஏற்படுகிறது.
செரிமானப் பிரச்சனை இருந்தால் குடலில் கழிவுகள் தேங்கிவிடும்.இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு நாளடைவில் பைல்ஸ் பாதிப்பாக மாறிவிடும்.குடலில் அதிகமான கழிவுகள் இருந்தால் பசியின்மை பிரச்சனை ஏற்படும்.
குடலில் அதிகப்படியான கெட்ட கழிவுகள் தேங்கி இருந்தால் முகப்பரு,நாக்கில் வெள்ளை புள்ளி போன்றவை ஏற்படும்.குடல் கழிவுகளால் வியர்வை துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.உடல் சோர்வு,சோம்பல் உணர்வு,மூட்டு வீக்கம்,தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
குடல் கழிவுகளை நீக்க வழிகள்:
1)புரோபயாட்டிக் நிறைந்த தயிர்,இட்லி,தோசை போன்ற உணவுகளை காலை நேரத்தில் சாப்பிட வேண்டும்.
2)ப்ரபயாட்டிக் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.வெது வெதுப்பான தண்ணீர் பருக வேண்டும்.அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3)அதிகம் பால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.விளக்கெண்ணெயை தண்ணீரில் கலந்து பருகினால் கழிவுகள் வெளியேறும்.
4)வாழைப்பழம்,பப்பாளி பழம் சாப்பிட்டால் குடல் கழிவுகள் வெளியேறிவிடும்.ஓமத்தை சூடான நீரில் கலந்து குடித்தால் குடல் கழிவுகள் நீங்கும்.
5)செரிமானத்தை தூண்டும் இஞ்சி,பெருஞ்சீரகம்,பட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6)கீரை உணவுகளை சாப்பிட்டால் குடலில் உள்ள கழிவுகள் மலத்தில் வெளியேறிவிடும்.எலுமிச்சை பானம் பருகினால் குடல் கழிவுகள் வெளியேறிவிடும்.