படுத்த 5 நிமிடத்தில் தூக்கம் சொக்கி கொண்டு வர இந்த ஐந்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த நிம்யதியான தூக்கத்தை வரவழைக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தூக்கமின்மை. அதாவது இரவு நேரங்களில் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது. ஒரு சிலர் படுத்தவுடன் தூங்கி விடுவார்கள் அவர்களைப் பற்றி கவலை வேண்டாம். ஒரு சிலர் படுத்தவுடன் அதிக நேரம் புரண்டு புரண்டு படுப்பார்கள். தூக்கம் வராது. ஒரு சிலர் தூக்கம் வரவில்லை என்று இரவு அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற செயல்களை செய்வார்கள். அது உடல் நலத்திற்கு அதிக கேடுகளை விளைவிக்கும்.
இன்னும் ஒரு சிலர் தூக்கமின்மை காரணத்திற்காக நன்கு தூங்க வேண்டும் என்பதற்காக தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். அது முற்றிலும் தவறான செயல். அவ்வாறு தூக்கம் வராமல் அவதிப்படும் நபர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வரவழைக்க சில எளிய வழிமுறைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வருவதற்கான வழிமுறைகள்…
* நாம் தலைக்கு வைக்கும் தலையணைக்கு கீழ் ஒரு பூண்டு வைக்கலாம். இந்த பூண்டின் வாசமானது மன அமைதியை தந்து ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
* ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என்றால் வெளிச்சம் குறைவாக உள்ள விளக்குகளை படுக்கை அறையில் பயன்படுத்தலாம்.
* இரவு தூங்கச் சொல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதமான சூட்டில் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். இது உறக்கத்தை தூண்டும்.
* மூச்சை உள்ளே இழுப்பது, வெளியே விடுவது என்று உங்கள் சுவாசத்தை கவனித்து வர வேண்டும். அவ்வாறு கவனித்து வந்தால் மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் வரும்.