பெரியவர்கள் மட்டுமல்ல சிறுவர்களும் பேட் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு,பக்கவாதம்,இரத்த அழுத்தம்,சுவாசப் பிரச்சனை போன்றவை உண்டாகும்.
இந்த கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானத்தை தொடர்ந்து குடித்து வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
1)தண்ணீர் – 2 கப்
2)இஞ்சி – ஒரு தேக்கரண்டி
3)மிளகு – அரை தேக்கரண்டி
4)நெல்லிக்காய் பொடி – ஒரு தேக்கரண்டி
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அரை தேக்கரண்டி கருப்பு மிளகை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
பெரிய நெல்லிக்காய் பொடி 100 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளவும்.இவை அனைத்தையும் கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.பிறகு இதை குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையத் தொடங்கிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)கொத்தமல்லி விதை – ஒரு தேக்கரண்டி
3)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை போட்டு லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.