தைராய்டில் இருந்து விடுபட இதை ஒரு முறை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!
இன்று அதிகரித்து வரும் உடல்நல பிரச்சனைகளில் தைராய்டு ஒரு முக்கியமான உள்ளது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது.
தைராய்டு அதிகமாக சுரந்தால் உடல் சோர்வு, உடல் எடை குறைவு, சாதாரண குளிரை கூட தாங்க முடியாத நிலை ஏற்படும்.
இதேபோல் தைராய்டு குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிப்பது, இதயத்துடிப்பில் மாற்றம், எரிச்சல், பதற்றம், போன்ற நிலை ஏற்படும்.
உணவில் அயோடின் சத்து குறைபாடு, மரபியல் குறைபாடு, மன அழுத்தம் போன்றவற்றால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.
தைராய்டு பிரச்சனை தீர்வதற்கு எதை சாப்பிடலாம்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நுணா இலை
மல்லி
மிளகு
பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை
செய்முறை 1
நான்கு நுணா இலைகளை சின்ன சின்னதாக எடுத்துக்கொண்டு 350 மி.லி.தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும். அதனுடன் ஒரு தேக்கரண்டி மல்லியை சேர்க்க வேண்டும்.
இந்த 350 மி. லி. தண்ணீர் 200 மி.லிட்டராக வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு அதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வேண்டும்.
இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு பருகிவர தைராய்டு பிரச்சனை நிரந்தரமாக குணமடையும்.
செய்முறை 2
ஆறு தேக்கரண்டி மல்லி எடுத்துக்கொண்டு அதனுடன் ஒன்றரை தேக்கரண்டி மிளகை சேர்த்து நன்றாக வறுத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 400 மி. லி. அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒன்றரை தேக்கரண்டி அளவிற்கு அரைத்த பொடியை சேர்க்க வேண்டும்.
இது நன்றாக கொதித்து வரும் போது பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு நன்றாக கொதிக்க வைத்த பின்னர் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக் கொண்ட இந்த கஷாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 நாட்களுக்கு பருகினாலே போதும் தைராய்டு பிரச்சனை நிரந்தரமாக குணமடையும்.