இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

Photo of author

By Sakthi

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!

Sakthi

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க!!
இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் தரும் சில அருமையான மற்றும் எளிமையான மருத்துவங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
* மார்பு வலி உள்ளவர்கள் கருந்துளசி இலைகள் மற்றும் செம்பருத்தி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இதை நன்கு சுத்தம் செய்து இதில் கஷாயம் செய்து தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் மார்பு வலி குறையும்.
* இதயம் வலுவடைய மாதுளம் பழத்தில் இருக்கும் தோலை நீக்கி நன்கு அரைத்து அதன் சாற்றை மட்டும் எடுத்து குடித்து வந்தால் இதயம் நன்கு பலம் பெறும்.
* படபடப்பு ஏற்படும் பொழுது பூண்டுகளை சுட்டு அதை சாப்பிட்டு பிறகு தண்ணீர் குடித்தால் படபடப்பு குறையும்.
* இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறைவதற்கு திராட்சை பழங்களை எடுத்து வெந்நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு திராட்சையில் இருக்கும் சாறு எடுத்து அதனுடன் சம அளவு துளசி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் இதயத்தில் ஏற்படும் படபடப்பு குறையும்.
* வெள்ளரிப் பிஞ்சுகள் எப்போது கிடைக்குமோ அப்பொழுது அந்த வெள்ளரிப் பிஞ்சுகளை ஒன்று அல்லது இரண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் குறையும்.
* இதயம் பலவீனம் அடைவதை தடுக்க அத்திப் பழங்களை எடுத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு இந்த பொடியை சலித்து ஒரு டேபிள் ஸ்பூன் பொடியை பாலில் கலந்து தினமும் காலை, மாலை என இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் இதயம் பலவீனம் அடைவது குறைகின்றது.
* நார்ச்சத்து நிரம்பிய பயிறு வகைகள், முளைக்கட்டிய தானியங்கள், கீரைகள், பழங்கள், வாழைப் பூ, வாழைத் தண்டு, புடலங்காய், பீன்ஸ், முருங்கை, பலாப்பழக் கொட்டை, ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது.