கழுத்து வலி ஒரே நாளில் சரியாக இந்த ஒரு மருந்து போதும்!! வீட்டிலே செய்யலாம்!!

0
125
#image_title

கழுத்து வலி ஒரே நாளில் சரியாக இந்த ஒரு மருந்து போதும்!! வீட்டிலே செய்யலாம்!!

கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற வலிகளால் தினமும் வேதனை அனுபவித்து வருபவர்களுக்கு இந்த பதிவில் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று எளிமையான மருத்துவ முறையை தெரிந்து கொள்ளலாம்.

 

கழுத்து வலி ஏற்படுவதற்கு காரணம் நம் தலையில் தண்ணீர் கோர்த்து இருப்பதால் தான். அதாவது நீர் கோர்த்து இருப்பதால் கழுத்து வலி, தோள்பட்டை வலி ஆகியவை ஏற்படுகின்றது. இதனால் தலைக்கு குளித்து முடித்த பிறகு தலையில் சிறிதும் கூட ஈரம் இல்லாத அளவிற்கு துடைத்தால் போதும்.

 

கழுத்து வலியை சரிசெய்யும் மருந்தை தயாரிக்க தேவையான பொருள்கள்

 

* மணல்

* இரஸ்னாதி சூரணம்

* எலுமிச்சம் பழம்

 

கழுத்து வலியை எவ்வாறு சரி செய்வது…

 

கழுத்து வலியை எவ்வாறு சரிசெய்வது என்பதை இனி பார்ப்போம். அதற்கு முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன்(Pan) பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு மணலை கொட்டி சூடாக்கி அதை ஒரு துணியில் போட்டு கட்டிக் கொள்ளவும். ஒத்தடம் கொடுக்க உதவும் வகையில் மணலை ஒரு துணியில் போட்டுக் கட்டிக் கொள்ளவும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் அரை எலுமிச்சம் பழசாற்றை அதில் விட்டு லேசாக சூடாக்கவும். பிறகு நாட்டு மருந்து கடைகளில் விற்கும் இரஸ்னாதி சூரனத்தை சிறதளவு அந்த எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து லேசாக சூடாக்கி ஒரு பேஸ்ட் பதம் வரும் வகையில் கலந்து எடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு இந்த பேஸ்டை தோள்பட்டையில் மற்றும் கழுத்தில் வலி உள்ள இடங்களில் தேய்த்துக் கொள்ளவும். பின்னர் ஒத்தடம் கொடுக்க கட்டி வைத்திருக்கும் மணல் பையை எடுத்து அதன் மீது ஒத்தடம் கொடுக்க வேண்டும். மணலில் சூடு ஆறிவிட்டால் மீண்டும் இதமாக சூடுபடுத்த வேண்டும்.

 

இதை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரைக்குள் மட்டுமே நீங்கள் இதை செய்ய வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு முறை இவ்வாறு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 5 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்கள் வரை மட்டுமே ஒத்தடம்

கொடுக்க வேண்டும்.