தலை பகுதியை சுற்றி வலி ஏற்படுவதை தான் தலைவலி என்கிறார்கள்.தூக்கமின்மை,டென்ஷன்,மன அழுத்தம் போன்ற காரணங்களால் தலைவலி உண்டாகிறது.சிலர் தீராத தலைவலி பிரச்சனையை அனுபவித்து வருவீர்கள்.
தலைவலிக்கு சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யுங்கள்.
டிப் 01:
சுக்கு
கொத்தமல்லி விதை
கருப்பட்டி
*ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை லேசாக வறுத்து உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ள வேண்டும்.
*பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் சேர்க்க வேண்டும்.அதற்கு அடுத்ததாக இடித்த சுக்கு மற்றும் கொத்தமல்லி விதையை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*அடுத்து இரண்டு தேக்கரண்டி கருப்பட்டியை அதில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் தலைவலி தலையில் குத்தல் உணர்வு நீங்கும்.
டிப் 02:
லாவண்டர் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய்
தண்ணீர்
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி இரண்டு சொட்டு லாவண்டர் எண்ணெய் மற்றும் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து ஆவி பிடிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால் தலைவலி விட்டுப்போகும்.
டிப் 03:
மிளகு கீரை எண்ணெய்
அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி அளவு மிளகு கீரை எண்ணெய் சேர்த்து லேசாக சூடுபடுத்த வேண்டும்.
பிறகு இளஞ்சூட்டு பக்குவத்தில் இருக்கும் பொழுது நெற்றி பகுதியில் தடவினால் தலைவலி மற்றும் குத்தல் உணர்வு சரியாகும்.
டிப் 04:
வெந்நீர் ஒத்தடம்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு சூடுபடுத்தி கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணையை எடுத்து சூடான நீரில் போட்டு பிழிந்து நெற்றி பகுதியில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் தலைவலி மற்றும் தலை குத்தல்,ஒருபக்க தலைவலி அனைத்தும் நீங்கும்.