இரயில் நிலையங்களில் உணவுகளை எளிமையாக விற்பனை செய்யலாம்! ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் விண்ணப்பம் செய்யுங்கள்!!
இரயில் நிலையங்களில் இனிமேல் அனைவரும் தாங்கள் தயார் செய்யும் உணவுப் பொருட்களை முறையான அனுமதி பெற்று விற்பனை செய்யலாம். அதற்கான நடைமுறையை இரயில்வே நிர்வாகம் எளிமைப்படுத்தி முக்கியாமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தற்பொழுது இரயில் நிலையங்களில் கேட்டரிங் முறைப்படி டெண்டர் முறைப்படி விற்பனையாளர்கள் பயணிகளுக்குத் தேவையான டீ, பிஸ்கட், சாப்பாடு போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இந்தியன் இரயில்வே கேட்டரிங் சர்வீஸ் கூட முக்கியமான நகரங்களில் உணவு சேவையை வழங்கி வருகின்றது.
இவை அனைத்தும் டெண்டர் முறைப்படி கடந்த ஆண்டு வரை நடந்து வருகின்றது. அதற்கு மாற்றாக தற்பொழுது இரயில்வே நிர்வாகம் இரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதை எளிமைப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றையும் இரயில்வே வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியன் இரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு உட்பட்ட இரயில் நிலையங்களில் குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் விற்பனை செய்வதற்கான நடைமுறை தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறையின்படி முறையாக அனுமதி பெற்ற பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர், பிஸ்கட், சாக்லெட், கேக், பிராண்ட் செய்யப்பட்ட உணவுப் பொட்டலங்கள் முதலியவற்றை விற்பனை செய்யலாம்.
முந்தைய ஆண்டுகளில் இரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு அனுமதி செய்பவர் டெண்டர் முறைப்படி அதாவது குறிப்பிட்ட சில ஆண்டுகள் வரை விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது. அவர்கள் பாதியிலேயே சென்று விட்டால் மீண்டும் அவருக்கு விற்பனை செய்வதற்கான உரிமம் கிடைக்க சில காலம் காத்திருக்க வேண்டும்.
இந்த டென்டர் முறைக்கு பதிலாக புதிதாக தெற்கு இரயில்வே வால்க் இன் நடைமுறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் அனுமதி பெறும் வகையில் இந்த வால்க் இன் நடைமுறையை தெற்கு இரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
எனவே இரயில் நிலையங்களில் உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இதற்கான வழிமுறைகளை தெற்கு இரயில்வேயின் அதிகாரப்பூர்வமான வலைதளமான www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் இதைத் தவிர பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சென்னையில் இருக்கும் தெற்கு இரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் தலைமை வணிக மேலாளரிடம் செலுத்தலாம். அல்லது பயணியர் சேவைகள் மற்றும் கேட்டரிங் பிரிவில் சமர்ப்பிக்கலாம். மேலும் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் நடைமுறையும் கட்டணம் செலுத்துதல் நடைமுறையும் விரைவில் ஆன்லைனில் செயல்படுத்தப்படும்” என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.