மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!!

0
36
#image_title

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை.. உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!! இந்த தேதியில் “மிக்ஜாம்” புயல் கன்பார்ம்!!

கடந்த சில தினங்களுக்கு முன் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. நேற்று இவை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில் தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நாள் கனமழைக்கே தலைநரகர் சென்னை வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கனமழை வருகின்ற டிசம்பர் 04 ஆம் தேதி வரை நீட்டிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தற்பொழுது உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற டிசம்பர் 3 அன்று புயலாக வலுக்க கூடும் எனவும் இந்த புயலுக்கு மிக்ஜாம் எனவும் பெயரிடப்பட்டு இருக்கிறது. டிசம்பர் 4 அன்று வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து பின்னர் அண்டை மாநிலமான ஆந்திராவின் மச்சிலிபட்டினத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் கடலோர மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.