அடி வயிற்றுப்பகுதி தொங்கி போக காரணம் உணவு இல்லையாம்!! இது தான் தொப்பை போட காரணமே!!

0
25

ஆண்,பெண் இருவரும் உடல் எடை பிரச்சனையை சந்திக்கின்றனர்.சிலருக்கு கை கால்கள் ஒல்லியாக இருக்கும் ஆனால் வயிற்றுப் பகுதியில் மட்டும் கொழுப்பு படிந்து காணப்படும்.அதாவது அடிவயிற்றுப் பகுதியில் மட்டும் சதை தொங்கும்.இதற்கு நாம் பின்பற்றும் உணவுமுறை மட்டும் காரணமில்லை.

உடலில் ஏற்படும் நோய் பாதிப்புகள்,மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் அடி வயிற்றுப் பகுதியில் சதை தொங்கும்.மன அழுத்தத்தின் போது இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ள தோன்றுதல்,எண்ணையில் பொரித்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவற்றின் விளைவாக அடி வயிற்றுப் பகுதி அதிகரிக்க தொடங்குகிறது.

அதேபோல் மன அழுத்தம் காரணமாக தூக்கமின்மை ஏற்படுகிறது.இதன் விளைவாக வயிற்றுப் பகுதியில் சதை தொங்க ஆரம்பிக்கிறது.எனவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க நீங்கள் மூலிகை வைத்தியத்தை பின்பற்றி வாருங்கள்.

அமுக்கிரா கிழங்கு சூரணம் – ஒரு தேக்கரண்டி
பசும் பால் – ஒரு கிளாஸ்
பனங்கற்கண்டு – சிறிதளவு

அமுக்கிரா கிழங்கு சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவு பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி அமுக்கிரா கிழங்கு சூரணம் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு பொடி சேர்த்து மிக்ஸ் செய்து பருகினால் மன அழுத்தம் குறையும்.இதனால் வயிற்றுப் பகுதியில் சாக்கு தொப்பை ஏற்படுவது கட்டுப்படும்.இது தவிர நடைபயிற்சி,ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் அடி வயிற்றுத் தொப்பையை குறைக்கலாம்.

Previous articleமார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? ப்ரஸ்ட் கேன்சர் வந்தால் மார்பை எடுக்கணுமா?
Next articleHealth Tips: உங்களுக்கு வலது பக்க அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட இதுதான் காரணம்!!