வைட்டமின்கள் டி, ஈ, கே கிடைக்கும் உணவுகள்!!! இதன் நன்மைகள் என்னென்ன!!?
வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் கிடைக்கும் உணவுகள் மற்றும் இந்த வைட்டமின். சத்துக்களின் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முந்தையதொரு பதிவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய சத்துக்களால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அந்த சத்துக்கள் கிடைக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த பதிவில் அதே போல வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் கிடைக்கும் உணவுகள் மற்றும் இந்த வைட்டமின்களின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் டி சத்தின் நன்மைகள்…
வைட்டமின் டி சத்து நம்முடைய எலும்புகளுக்கு பலம் அளிக்கிறது. பற்களுக்கு பலம் தருகின்றது. மேலும் பற்கள் தொடர்பான நோய்களை குணப்படுத்துகின்றது. வைட்டமின் டி சத்துக்கள் நமது உடலில் குறைந்தால் பற்கள் கொட்டி விடும். குழந்தைகளுக்கு வைட்டமின் டி சத்து போதிய அளவு இல்லை என்றால் குழந்தைகளின் கால்கள் சக்கரம் போல வளைந்து விடும். வைட்டமின் டி இல்லை என்றால் வயிறு ஊதிவிடும். எலும்புகள் பலவீனமாகி விடும்.
வைட்டமின் டி சத்து கிடைக்கும் உணவுகள்…
முட்டை, மீன், மீன். எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் டி சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மேலும் காலை நேர சூரிய வெளிச்சத்தில் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றது.
வைட்டமின் ஈ சத்தின் நன்மைகள்…
வைட்டமின் ஈ சத்து நமது உடலில் ஆண்மை தன்மையை அதிகரிக்கும். மலட்டுத் தன்மையை சரி செய்யும். வைட்டமின் ஈ சத்து நமது உடலில் குறைந்தால் நமது உடலில் உள்ள தசைகள் பலவீனம் அடையும். வைட்டமின் ஈ சத்து குறைந்தால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
வைட்டமின் ஈ சத்துக்கள் கிடைக்கும் உணவுகள்…
வைட்டமின் ஈ சத்து கோதுமை, பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் அதிகமாக கிடைக்கின்றது. இவற்றை நாம் எடுத்துக் கொண்டால் வைட்டமின் ஈ சத்து நமது உடலுக்கு அதிகம் கிடைக்கும்.
வைட்டமின் கே சத்தின் நன்மைகள்…
வைட்டமின் கே சத்துக்கள் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. நமக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் எதுவும் வராமல் பாதுகாத்து இதயத்தை பலப்படுத்துகின்றது. மேலும் வைட்டமின் கே சத்து எலும்பையும் பலப்படுத்துகின்றது.
வைட்டமின் கே சத்துக்கள் கிடைக்கும் உணவுகள்…
வைட்டமின் கே சத்துக்கள் கீரைகள், காய்கறிகள், முளைக் கட்டிய பயிறு வகைகள், கேடி முந்திரி, உலர்ந்த துளசி, செங்கீரை(சிகப்பு தண்டு கீரைகள்) ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகின்றது.