இந்த கால கட்டத்தில் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் நோய் பாதிப்புகள் எளிதில் அண்டிவிடுகிறது.சோமல் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்கள் நமது உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்துவிடும்.
நமது உடலில் இரு வகையான கொழுப்பு இருக்கின்றது.ஒன்று நல்ல கொழுப்பு மற்றொன்று எல்டிஎல் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பு.இதில் LDL கொழுப்பு நமது உடல் ஆரோக்கியத்தை பாழாக்குகிறது.
இந்த கெட்ட கொழுப்பை கரைக்க நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
1)முழு தானிய உணவுகள் மற்றும் ஓட்ஸ்
தினமும் காலையில் எழுந்ததும் நார்ச்சத்து மிகுந்து காணப்படும் முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.ஓட்ஸ்,பழுப்பு அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
2)கொழுப்பு மீன்கள்
கடல் மீனில் நல்ல கொழுப்பு அதிகளவு உள்ளது.வாரம் ஒருமுறை இந்த மீன் உணவை சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
3)பருப்பு
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் ராஜ்மா,காராமணி,சுண்டல் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.
4)உலர் விதை மற்றும் உலர் பழங்கள்
திராட்சை,அத்தி,கிவி போன்ற உலர் பழங்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.
அதேபோல் பாதாம் பருப்பு,வால்நட் போன்ற உலர் பருப்புகளை சாப்பிட்டால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகும்.
5)டார்க் சாக்லேட்
அடிக்கடி டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படும்.டார்க் சாக்லேட் சாப்பிட்டால் மனச் சோர்வு நீங்கும்.
6)நீர்பழங்கள்
தர்பூசணி,முலாம் பழம்,வெள்ளரி பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.