30 வயதை தாண்டியவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Photo of author

By Divya

30 வயதை தாண்டியவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் அறவே தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Divya

இன்று இளம் வயதினர் முதுமை தோற்றத்தை அடைவது சாதாரண விஷயமாக மாறிவருகிறது.அதேபோல் முதுமை வயதில் இருப்பவர்கள் தங்கள் இளமை காலத்தை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் பார்த்து ரசிக்கும் சினிமா பிரபலங்கள் எவ்வளவு வயதானாலும் இளமையாகவே இருக்க என்ன காரணம் என்று சிந்திருக்கீங்களா? சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் தங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இளமை தோற்றத்தை பெற முடியும்.

நமக்கு வயதாகும் பொழுது நமது உடலில் பல மாற்றங்கள் நிகழ்கிறது.இது உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்களாக இருக்கலாம்.குறிப்பாக 30 வயதை கடந்தவர்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு உடலில் அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது.

முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்கள்தான் ஓரளவிற்கு வயதானவர்கள் போல் தெரிவார்கள்.ஆனால் தற்பொழுது 30 வயதை தொட்டாலே அவர்களுக்கு வயதாகிவிட்டது என்று முடிவு செய்துவிடுகின்றனர்.30 வயதை கடந்த பின்னர் தலைமுடி உதிர்வு,முழங்கால் வலி,உடல் சோர்வு,கண் பார்வை குறைபாடு ஏற்படுதல்,தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீங்கள் உங்கள் 30 வயதை எட்டிய பிறகு உணவுமுறையில் நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள்,புரதம்,கால்சியம்,வைட்டமின்கள்,இரும்பு போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

நீங்கள் இளமை காலத்தில் ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றி வந்தால்தான் முதுமை காலத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.நீங்கள் இளமை காலத்தில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் வயதான பின்னர் உங்கள் உடல் மற்றும் சரும ஆரோக்கியம் மோசமானதாக இருக்கும்.30 வயதிற்கு பிறகு உங்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி கால்சியம் சத்து நிறைந்த பால்,பால் பொருட்கள்,பன்னீர்,முட்டை,கீரைகளை உட்கொள்ளலாம்.

எலும்பு ஆரோக்கியம் மேம்பட வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.இரும்புச்சத்து கிடைக்க கீரை உணவுகளை சாப்பிடலாம்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கிடைக்க மீன்,அவகேடோ போன்றவற்றை சாப்பிடலாம்.

புரதம் கிடைக்க முட்டை,பாதாம்,முந்திரி போன்ற உலர் விதைகளை சாப்பிட வேண்டும்.அக்ரூட் பருப்பு,பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகள் சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.அதிக சர்க்கரை,அதிக உப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த இறைச்சி மற்றும் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மாவுச்சத்து நிறைந்த பொருட்களை தவிர்த்துவிட்டு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இப்படி சாப்பிட்டு வந்தால் உங்கள் முதுமை காலத்திலும் இளமையாக ஆரோக்கியமாக இருக்கலாம்.