சைனஸ் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் உணவுகள்!
நம்மில் பலருக்கு குளிர் காலம் தொடங்கிவிட்டால், சளி,ஜலதோஷம், ஆஸ்துமா போன்ற பல்வேறு பிரச்சினைகள் வந்துவிடும். சளி தொந்திரவை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறி மிகவும் நம்மை சிரமபடுத்தும்.
சைனஸ் பாதிப்புகளுக்கு ஆரோக்கிய குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும் முக்கிய காரணிகளாகும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை தொற்றுகள் மூலமாக சளி பிடிக்கும்போது, சைனஸ் அதிக தொல்லை கொடுக்கிறது.
சைனஸ் பிரச்சினைக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உட்கொண்டாலும், சில உணவுகளின் மூலம் சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். எனவே எந்த வகையான உணவுகளை சைனஸ் தொந்திரவு இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரை குடிப்பதால் சைனஸ் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து பாக்டீரியா தொற்றை எதிர்த்து போராடுகிறது. காய்ச்சிய நீரை அருந்துவதால் சுவாச பாதையில் உள்ள தொற்றுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
அன்னாசி பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் சளி சவ்வுகளில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. அன்னாசியில் உள்ள நொதிகள் சைனசால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, சுவாச பாதை அழற்ச்சியை போக்குகிறது.
மிளகு பல மருத்துவ குணங்களை கொண்டது. நல்ல காரமான மிளகை எடுத்துக் கொண்டால் , அது சளியை இளக செய்து வெளியேற்றும். மிளகில் உள்ள கேப்சைசின் நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.
குதிரைவாலி நிறைய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, வீக்கத்தை குறைக்கிறது. இதில் ஆன்டி பயாடிக் உள்ளது.
பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு, மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சுவாச தொற்றுக்கு காரணமான வைரஸை போக்குகிறது. இதய நோய் மற்றும் ஜலதோஷத்திற்கு எதிராகவும் பூண்டு செயல்படுகிறது.
ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் சளி சவ்வுகளை சேதத்திலிருந்து காத்து கொள்ளலாம். எனவே சிட்ரஸ், கிவி, கீரை, பெர்ரி, பூசணி, இனிப்பு உருளைக்கிழங்கு, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
இஞ்சி இது உடல் அழற்சி மற்றும் சுவாச தொற்றுக்களை போக்குகிறது. ஒவ்வாமை, சைனஸ், சளித்தொல்லை, வாந்தி மற்றும் வலியை போக்கி ஜீரணத்திற்கு உதவுகிறது.
வெந்நீருடன் சிறிது மஞ்சள் கலந்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால் சைனஸ் குணமாகும்.
தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்வதால், பருவகால ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்றுகளை போக்குகிறது.
சைனஸ் பிரச்சினை இருப்பவர்கள் பால் பொருட்களை தவிர்த்து, நல்ல மூலிகை தேநீரை அருந்தலாம். ஆவி பிடிப்பதால் மூக்கடைப்பு மற்றும் தலைவலி குணமாகும்.