உயிரை பறிக்கும் உணவுப் பொருட்கள்!! ஐயையோ இதில் இவ்வளவு விஷம் நிறைந்திருக்கா?

0
164

நல்ல ஆரோக்கியத்துடன் வாழ ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.சைவம்,அசைவம் என்று மனிதர்களின் உணவு வகை இருக்கிறது.மனிதர்கள் உயிர்வாழ உயிர்நாடியாக திகழும் சில உணவுகள் விஷமாக மாறுகிறது.நாம் ருசித்து உண்ணும் சில உணவுகள் அதிக விஷத்தன்மையை கொண்டிருக்கிறது.

1)உருளைக்கிழங்கு

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் உருளைக்கிழங்கு.இதில் வறுவல்,பொரியல்,கிரேவி,சில்லி என்று ருசியான உணவுகள் சமைத்து உண்ணப்படுகிறது.ஆனால் இந்த உருளைக்கிழங்கு ஒரு விஷத்தன்மை நிறைந்த பொருள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் முளைத்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் உருளைக்கிழங்கை சாப்பிட்டால் அது விஷமாக மாறிவிடும்.இதில் கிளைக்கோ-அல்கலாட்ஸ் அதிகம் நிறைந்திருக்கிறது.இது வயிற்று வலி,அதீத தலைவலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.எனவே முளைத்த மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் உருளைக்கிழங்கை தவிர்த்துவிட வேண்டும்.

2)தக்காளி

இதன் வேர்,இலை மற்றும் காம்பை தவிர்த்துவிட வேண்டும்.தக்காளி பழத்தை பச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.இதில் அல்கலி என்று இரசாயனம் நிறைந்திருக்கிறது.இது உடலில் பல உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

3)ஆப்பிள்

இந்த பழத்தில் விதைகளை சாப்பிடக் கூடாது.விதையில் அமிக்தாளின் என்ற கொடிய விஷம் உள்ளது.இந்த விதைகளை உட்கொண்டால் மயக்கம்,இரத்த அழுத்தம்,சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.

4)பாதாம் பருப்பு

கசப்பு சுவை நிறைந்த பாதாமில் ஹைட்ரஜன் சைனட் அதிகளவு இருக்கிறது.இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவித்துவிடும்.

5)தேன்

சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தேனை பதப்படுத்தாமல் உட்கொண்டால் அது உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

6)முந்திரி

சுவை மிகுந்த முந்திரி கொட்டையை பச்சையாக சாப்பிடக் கூடாது.இதில் உருஷியோஸ் என்ற விஷம் நிறைந்திருக்கிறது.முந்திரியை பச்சையாக சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

Previous articleஇதை செய்த அடுத்த நிமிடமே கால்வலி காணாமல் போய்விடும்!! யோசிக்காமல் ட்ரை பண்ணுங்க!!
Next articleசெல்போன்களை சார்ஜ் போட விதிகள் உள்ளன!! யாருக்காவது தெரியுமா?