நமது வயிற்றுப் பகுதியில் அதாவது இரைப்பையில் உருவாகும் புண்களைதான் அல்சர் என்று அழைக்கின்றோம்.இந்த வயிற்று அல்சர் புண்ணை பெப்டிக் அல்சர் என்று கூறுகின்றனர்.அதிக அமில உணவுகளால் இந்த பாதிப்பு எளிதில் தோன்றுகிறது.
இந்த அல்சர் பாதிப்பு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.இதில் ஆரோக்கியம் இல்லாத உணவுகள் முதலிடத்தில் இருக்கின்றது.காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகும்.உணவு உட்கொள்வதை தவிர்த்தால் அல்சர் புண்கள் உருவாகும்.
வயிற்றுப் புண்கள் பாதிப்பை அலட்சியமாக கருதினால் அவை புற்றுநோய் பாதிப்பாக மாறிவிடும்.எனவே அல்சர் புண்கள் வந்தவர்கள் அவை தீவிரமடைவதற்கு முன்னர் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.
அல்சர் புண்கள் உருவாக காரணங்கள்:
1)புளிப்பு மற்றும் காரணமான உணவுகள்
2)மோசமான உணவுப்பழக்கம்
3)அமில உணவுகள்
4)உணவு தவிர்த்தல்
அல்சர் புண் அறிகுறிகள்:
1)புளித்த ஏப்பம்
2)அசிடிட்டி
3)வயிறு எரிச்சல்
4)கருப்பு மலம்
5)ஆசனவாய் ஓட்டையில் எரிச்சல் உணர்வு
6)உணவை சாப்பிட்ட உடனே மலம் கழித்தல் நிலை
அல்சர் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்:
பானங்களை சூடாக பருகுவதை தவிர்க்க வேண்டும்.காஃபின் நிறைந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.காபி,டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதிக காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.உணவை அந்தந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.முட்டைகோஸ்,காளிஃபிளவர்,ப்ரோக்கலி போன்ற காய்கறிகளை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.சிட்ரிக் அமில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மது,புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.உணவை பதப்படுத்தி சாப்பிடும் பழக்கத்தை கைவிட வேண்டும்.ஹோட்டல் உணவகளை தவிர்க்க வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள் செய்ய கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள்:
உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.
காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும்.வெறும் வயிற்றில் சீரகம் ஊறவைத்த தண்ணீர் பருக வேண்டும்.பழைய சாதத்தை காலை நேரத்தில் சாப்பிடலாம்.காலை நேரத்தில் பீட்ரூட்,மாதுளை,ஆப்பிள் போன்றவற்றை ஜூஸாக செய்து சாப்பிடலாம்.