வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

Photo of author

By Divya

வெயில் காலத்திக் தவிர்க்க வேண்டிய உணவுகளும்.. சாப்பிட வேண்டிய உணவுகளும்!!

Divya

கோடை காலம் தொடங்கி சில வாரங்கள் ஆன நிலையில் தற்பொழுது சூரிய வெயில் சுட்டெரித்து வருகிறது.கோடை காலத்தில் உடலில் பல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இந்த கோடை காலத்தில் சரும நோய்கள் வாட்டி எடுத்து வருகிறது.உடல் முழுவதும் கொப்பளம்,அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் அதிகமாகி குழந்தைகளை அதிக இன்னல்களுக்கு ஆளாக்குகிறது.கோடையில் உடலில் அதிக வியர்வை வெளியேறுவதால் நீரிழப்பு பிரச்சனை அதிகரிக்கிறது.

இதனால் தொண்டை வறட்சி,தோல் சுருக்கம்,உடல் சோர்வு,மயக்க உணர்வு உண்டாகிறது.அதிக வியர்வை வெளியேற்றத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு சிறுநீரக ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படுகிறது.

கோடை காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

கோடை காலத்தில் உணவுமுறையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சூடான உணவுகள் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

கொழுப்பு உணவுகள் உடலை மந்தமாக்கிவிடும்.கோடையில் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இரத்தத்தில் இருக்கின்ற குளுக்கோஸ் அதிகரிப்பதோடு சோர்வு,மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சர்க்கரை நிறைத்த குளிர் பானங்கள்,சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிக உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.உப்பு உணவுகள் இரத்தம் தொடர்பான பாதிப்புகளை அதிகமாக்கிவிடும்.எனவே காரம்,உப்பு,கொழுப்பு,சர்க்கரை மற்றும் எண்ணெய் உணவுகளை இந்த கோடை காலத்தில் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.இதற்கு பதில் பழையசோறு,நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்,மூலிகை பானங்களை பருகலாம்.