FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!!

Photo of author

By Rupa

FOOT CRACK: பாத வெடிப்பை காணாமல் போகச் செய்யும் சிம்பிள் ஹோம் மேட் க்ரீம்!!

உங்களில் பலருக்கு பாத வெடிப்பு பிரச்சனை இருக்கும்.நீண்ட நேரம் தரையில் நின்றபடி வேலை பார்த்தல்,உடல் பருமன்,சரும பிரச்சனை,உயரமான ஹீல்ஸ் அணிதல்,நீரில் அதிக நேரம் நின்று வேலை பார்த்தல் போன்ற காரணங்களால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது.

பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டால் அவை தீராத வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கி விடும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி வரவும்.

குறிப்பு 01:

1)மஞ்சள் தூள்
2)மருதாணி இலை
3)தேங்காய் எண்ணெய்

ஒரு துண்டு உலர்ந்த மஞ்சள் கிழங்கை இடித்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை உரல் அல்லது மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு மஞ்சள் பொடி மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பிறகு வெது வெதுப்பான நீரில் கால்களை கழுவி சுத்தம் செய்து விட்டு இந்த பேஸ்டை வெடிப்பு உள்ள இடத்தில் பூசவும்.இரவு நேரத்தில் இதை செய்தால் கால் வெடிப்பிற்கு விரைவில் பலன் கிடைக்கும்.இரவில் இந்த பேஸ்டை வெடிப்பில் அப்ளை செய்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வந்தால் வெடிப்பு மறைந்து விடும்.

குறிப்பு 02:

1)கற்றாழை ஜெல்
2)தேங்காய் எண்ணெய்

ஒரு கிண்ணத்தில் பிரஸ் கற்றாழை ஜெல் 4 தேக்கரண்டி மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை வெடிப்பில் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வந்தால் வெடிப்பு மறையும்.

குறிப்பு 03:

1)தேன்
2)மஞ்சள்

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை வெடிப்பில் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வந்தால் வெடிப்பு மறைந்து விடும்.

குறிப்பு 04:

1)ரோஜா இதழ்
2)வெண்ணெய்

ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழை நன்கு உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணம் எடுத்து 2 தேக்கரண்டி ரோஜா இதழ் பொடி மற்றும் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த பேஸ்டை வெடிப்பில் அப்ளை செய்து 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து வந்தால் வெடிப்பு மறைந்து பாதம் மிருதுவாக மாறும்.