Foot Crack Remedies in Tamil: ஒரே வாரத்தில் உங்கள் பாத வெடிப்பு மறைய.. இதை ட்ரை பண்ணங்க..!

Photo of author

By Priya

Foot Crack Remedies in Tamil: நம்மில் பலரும் நமது முகத்திறஙகு முக்கியத்துவம் காட்டும் அளவிற்கு நமது பாதங்களுக்கு முக்கியத்துவம் காட்டுவதில்லை. முகத்தில் சிறியதாக ஒரு கரும்புள்ளி வந்தாலே அதனை குணப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தேடிப்பிடித்து எப்படியும் அதனை சரிசெய்து விடுவோம். கருவளையம் வந்தாலோ, பருக்கள் வந்தாலோ மருத்துவரிடம் அனுகி உடனே அதற்கு தீர்வு காண்கிறோம்.

ஆனால் நம் பாதங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா?  என்று கேட்டால் கிடையாது. முதலில் சிறியதாக தொடங்கும் பாத வெடிப்பு தான் பிறகு நாட்கள் செல்ல, செல்ல தீவிரமாகி சிறிய கீறில் போல் உள்ளது மாறி, பெரிய வெடிப்பாக மாறுகிறது. இதனை ஆரம்பத்தில் சரிசெய்யாமல் அதனை அப்படியே விட்டுவிட்டு பிறகு வலி ஏற்படும் போது தான் அதனை நாம் காண்கிறோம். நாம் இந்த பதிவில்  வீட்டில் இருக்க கூடிய பொருட்களை வைத்து பாத வெடிப்பு குணமடைய செய்வது எப்படி என்றும், பாதங்களை முறையாக பராமரிப்பது எவ்வாறு (foot crack home remedies in tamil) என்றும் பார்க்கலாம்.

பாத வெடிப்பு குணமடைய

  • பாத வெடிப்புக்கு சிறந்த மருந்தாக நாம் கிழங்கு மஞ்சள் மற்றும் மருதாணி இலைகளை பயன்படுத்தலாம்.  மருதாணி சிறிதளவு மற்றும் கிழங்கு மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனை இரவு உறங்குவதற்கு முன்பு பாத வெடிப்பில் அப்ளை செய்துவிட்டு மறுநாள் அதனை லேசான வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வலி குறைந்து மீண்டும் பாதிப்பு ஏற்படாதவாறு (Pitha Vedippu Treatment in Tamil) இருக்கும்.
  • கிழங்கு மஞ்சளை பொடி செய்து அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதனை பாத வெடிப்பில் தொடர்ந்து அப்ளை செய்தால் வெடிப்பு மறைந்து, வலியும் குறைந்து விடும். வெடிப்பு அதிகமாக இருப்பவர்கள் இதனை 1 மாதம் பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
  • பப்பாளி பழம் இதனை பொதுவாக முகம் பளபளப்பாக இருக்க முகத்தில் தேய்த்து கொள்வார்கள். இந்த பழம் கிடைக்கும் சமையங்களில் நீங்கள் பாதங்களில் உள்ள பாத வெடிப்புகளில் தடவி வந்தால் குளிர்ச்சியை உண்டாகி வெடிப்பு மறைய உதவி புரியும்.

பாதம் பராமரிப்பு

  • நாள் தோறும் ஓடிக்கொண்டிருக்கும் நாம் சற்று ஓய்வெடுக்கும் நேரத்தில் நம் பாதங்களை பராமரிப்பதன் மூலம் நமக்கும் ஒரு மன அமைதி கிடைக்கும். விளக்கெண்ணெய்/நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை ஓய்வாக இருக்கும் நேரத்தில் உங்கள் பாதங்களில் அப்ளை செய்து மசாஸ் செய்தால் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து வெடிப்புகள் (Patha vedippu treatment at home) வராமல் தடுப்பதோடு, நமக்கும் ஒரு அமைதி கிடைக்கும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் லேசான வெந்நீர் சேர்த்து அதில் சிறிதளவு கல் உப்பு, 1/2 எலுமிச்சை பழ சாறு சேர்த்து பாதங்களை அதில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைத்து பிறகு பாதங்களில் உள்ள அழுக்கை ப்ரஷ் வைத்து பொறுமையாக நீக்கினால் பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்பு வராமலும் தடுக்கலாம்.
  • வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயமாக பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க: இந்த 3 இலை இருந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கல்லும் நீங்கும்!! இனி ஆயுசுக்கும் மருந்து மாத்திரை தேவையில்லை!!