கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

0
320
Football player Priya is dead! The work of doctors looking for hiding!
Football player Priya is dead! The work of doctors looking for hiding!

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு! மருத்துவர்கள் தலைமறைவு தேடும் பணி தீவிரம்!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்.இவருடைய மனைவி உஷாராணி .இவர்களுக்கு பிரியா என்ற மகள் உள்ளார்.இவர் கால் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்து வந்தார்.அதனையடுத்து அவர் ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை படித்து வந்தார்.

கால் பந்தின் மீது அதீத ஆர்வம் இருந்ததால் தினந்தோறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று வழக்கம் போல் பயிற்சி மேற்கொண்டார்.அப்போது அவருடைய காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது.அதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனையில் செய்தார்.

அப்போது அவருக்கு சவ்வு விலகி இருபதாகவும் தெரிவித்தனர்.அதனையடுத்து பிரியா வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.அதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை.

அதனால் அவர் மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பிரியா காலில் தசைகள் அனைத்தும் அழகக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அதனால் அவருடைய கால் உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.அதன் பிறகு அவருடைய கால் அகற்றப்பட்டது.இந்நிலையில்  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா சிகிச்சை பலனின்று நேற்று காலை உயிரிழந்தார்.

அதைதொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெரியார் நகர் அரசு மருத்துவமனையின் டாக்டர்களின் அலட்சியம் போக்கு மற்றும் தவறான சிகிச்சை முறையினால் தான் தங்கள் மகள் இறந்துள்ளார்.அதனால் சமந்தப்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்னுடைய மகளை கருத்தில் கொண்டு அரசு எங்கள் குடுபத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கால்பந்து வீராங்கனை விவகாரத்தில் மருத்துவர்களின் குடும்ப விவரங்கள் சேகரிக்கும் பணியில் பெரவள்ளூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.மருத்துவர்கள் தற்போது எங்கு உள்ளன என அவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Previous articleகல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Next articleசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!