ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.உடல் தசைகள் வலுவாக இருக்க ராகி,கம்பு ஆகிய சிறுதானியங்களை வைத்து கூழ் செய்து பருகலாம்.
இந்த இரண்டு சிறு தானியங்களிலும் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,மாங்கனீஸ்,வைட்டமின்கள்,இரும்பு உள்ளிட்டவை நிறைந்துள்ளது.உடல் வலிமையை அதிகரிக்கும் கம்பு ராகி கூழ் செய்வது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)ராகி – 25 கிராம்
2)கம்பு – 25 கிராம்
3)பசு மோர் – சிறிதளவு
4)உப்பு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
ஒரு பாத்திரத்தில் 25 கிராம் ராகி மற்றும் 25 கிராம் கம்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு தண்ணீரை வடிகட்டிவிட்டு ராகி மற்றும் கம்பை ஒரு காட்டன் துணியில் கொட்டி மூட்டை கட்டி முளைக்கட்டும் வரை காத்திருக்க வேண்டும்.
ராகி,கம்பில் முளைக்கட்டிய பிறகு அதை ஒரு காட்டன் துணியில் கொட்டி நன்றாக காய வைத்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கரைக்க வேண்டும்.பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கூழ் காய்ச்ச வேண்டும்.
கூழ் பச்சை வாசனை நீங்கி நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அரை மணி நேரத்திற்கு ஆறவிட வேண்டும்.
பின்னர் சிறிதளவு பசு மோரை கூழில் ஊற்றி கலக்க வேண்டும்.அடுத்து ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கூழில் போட்டு கலந்துவிட வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.இந்த சிறுதானிய கூழ் உடலை இரும்பு போன்று வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்,எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை செய்து பருகலாம்.
அதேபோல் இந்த சிறு தானியங்களில் தோசை,இட்லி,புட்டு போன்ற உணவுகள் செய்து சாப்பிடும் ஆரோக்கியமாக வாழலாம்.